×

சூரப்பாவுக்கு வைக்கப்படும் செக்…எங்கு சென்றாலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதிபதி கலையரசன் கிடுக்குபிடி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவடைந்துள்ளதாக  ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தகவல் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2018ல் நியமிக்கப்பட்ட சூரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து தமிழக அரசு நீதிபதி கலையரசன் குழு என்ற விசாரணை கமிஷனை நியமித்து விசாரித்து வருகிறது. சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது என்றும் சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக் கழக நிர்வாகிகள் கூறுவது உண்மையல்ல என்றும் அதற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கலையரசன் குழு ஏற்கனவே தெரிவித்ததுஇந்நிலையில் சூரப்பா எங்கு சென்றாலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் குற்றச்சாட்டுகளுக்கு சூரப்பா எழுத்துப்பூர்வமாக நேரிலோ பதிலளிக்கலாம் என்றும் நீதியரசர் கலையரசன் குழு தெரிவித்துள்ளது. மேலும், ‘சூரப்பா மீதான முறைகேடு குறித்து விசாரணை 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 3 முதல் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது. சாட்சிகளை விசாரித்த பின் அனைத்து குற்றச்சாட்டையும் தொகுத்து சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்படும். சூரப்பா எங்கு சென்றாலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பதில் அளிக்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.விளக்கத்தின் மீது ஆணையத்துக்கு திருப்தி வராவிடில் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும். .குற்றச்சாட்டு தொடர்பாக ஆணையம் கேட்கும் ஆவணங்களை அண்ணா பல்கலைக்கழகம் தரவில்லை ” என்றும் கூறியுள்ளது….

The post சூரப்பாவுக்கு வைக்கப்படும் செக்…எங்கு சென்றாலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என நீதிபதி கலையரசன் கிடுக்குபிடி! appeared first on Dinakaran.

Tags : Judge ,Kaliyarasan ,Surappa ,Chennai ,Anna University ,Kalaiyarasan Kitkubidi ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக...